திருமணத்துக்கு முன்பாக வீட்டின் முன்பு முகூர்த்தக்கால் அல்லது பந்தக்கால் நடுவதும் மாவிலைத் தோரணம் கட்டுவதும் மரபு. முதலில் பந்தக்காலுக்கு மஞ்சள், குங்குமத்தாலும், மாவிலையினாலும், அலங்கரித்து ஈசான்ய பாகத்தில் (வடகிழக்கு) நடுவது வழக்கம். வடகிழக்கு மூலையை "ஈசானதிசை" எனப் போற்றுவர் பெரியோர். ஈசானம் சிவாம்சம் உடைய தேவனுக்குரிய திசை. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளோடு கூடி மணமக்கள் இன்புற்று வாழ வேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடப்படுகிறத.
Monday, 8 June 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment