நெல்லி., மணத்தக்காளி., மருதாணி இலையின் மகத்துவத்தை அறிவீர்களா?.! எந்த நேரத்திலும் ஏற்படும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.!! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 20 May 2021

நெல்லி., மணத்தக்காளி., மருதாணி இலையின் மகத்துவத்தை அறிவீர்களா?.! எந்த நேரத்திலும் ஏற்படும் பிரச்சனைக்கு உடனடி தீர்வு.!!



வாய்ப்புண் மற்றும் உதடு வெடிப்பு என்பது பெரும்பாலும் நீரை குறைவாக அருந்துபவர்களுக்கு வரும் பாதிப்பு ஆகும். உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும் நேரத்தில்., இந்த விதமான பிரச்சனைகள் ஏற்படுவது உண்டு. இந்த பிரச்னையை தீர்ப்பது குறித்து இனி காண்போம்.

சீரகம் மற்றும் நாட்டு சர்க்கரையை சம அளவில் எடுத்துக்கொண்டு., பொடியாக அரைத்து கொண்டு காலை மற்றும் மாலையில் ஒரு தே.கரண்டி அளவிற்கு சாப்பிட்டு வந்தால் உதட்டு புண் மற்றும் உதட்டு வெடிப்பானது குணமடையும்.

திருநீற்றுப்பச்சை இலையை தினமும் 4 இலைகள் வீதம் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் குணமாகும்.

நெல்லி மரத்தின் இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு., நீரில் நன்றாக கொதிக்க வைத்து., இளம் சூட்டை (பருகும் அளவிற்கு சூடு இருந்தால் போதுமானது) அடையும் பட்சத்தில்., வாயை கொப்புளித்து வந்தால் வாய்ப்புண்ணானது எளிதில் குணமாகும்.

மணித்தக்காளி இலைகளை எடுத்து கொண்டு., அதனை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் குணமாகும். மேலும்., மணித்தக்காளி இலைகளை மென்று நாளொன்றுக்கு 6 முறை உண்டால் வாய்ப்புண் குணமாகும்.

மருதாணியின் இலைகளை சுமார் 1 மணிநேரம் ஊறவைத்து., பின்னர் கொதிக்க கொதிக்க காய்ச்சி., அந்த நீரை கசாயம் போல் வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்புண்., வாய்வேக்காடு மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

ஆவாரம் மரத்தின் பட்டைகளை பொடியாக அரைத்து., கசாயமாக மாற்றி வாய்கொப்புளித்து வந்தால் வாய்ப்புண் மற்றும் வாயில் ஏற்படும் துர்நாற்றமானது நீங்கும்.

கொய்யா மரத்தின் இலைகளை மென்று., பலதேய்த்து வந்தால் பல் வலி மற்றும் வாய்ப்புண் போன்ற பிரச்சனைகள் குணமடையும்

No comments:

Post a Comment

Post Top Ad