உங்கள் கையிலுள்ள சூரிய ரேகை உங்களுக்கு ஐஸ்வர்யத்தை கொடுக்குமா?
Seithi Punal
சூரிய விரல் என்று அழைக்கப்படும் மோதிர விரலுக்கு அடியில் உள்ள சூரிய மேட்டில் தோன்றும் ஒரு குறுக்குக்கோடு தான் சூரிய ரேகை ஆகும்.
இந்த ரேகையை கொண்டு ஒரு மனிதனின் அறிவுத்திறனையும், ஆற்றலையும் தெரிந்துக்கொள்ள முடியும். மற்ற முக்கிய ரேகைகளைப் போலவே இதுவும் ஆழப் பதிந்திருந்தால் தான் நல்ல அறிவுத்திறனும், ஆற்றலும் உண்டு என்று சொல்லலாம்.
இந்த ரேகை சந்திர மேட்டிலிருந்தே தொடங்குமானால் இவர்களுடைய அதிர்ஷடத்திற்கும், வெற்றிக்கும் மற்றவர்கள் காரணமாகவும், உதவியாகவும் இருப்பார்கள்.
இது சூரிய மேட்டை இரண்டாகப் பிளப்பது போல அமையும். இந்த ரேகை பளிச்சென்று அமைந்து சூரிய மேடும், குரு மேடும் நன்கு உயர்ந்து காணப்பட்டால் அவர்கள் மேதைகள் என்றும், சிறந்த அறிவாளிகள் என்றும் போற்றப்படுவார்கள்.Seithi Punal
சூரிய விரல் என்று அழைக்கப்படும் மோதிர விரலுக்கு அடியில் உள்ள சூரிய மேட்டில் தோன்றும் ஒரு குறுக்குக்கோடு தான் சூரிய ரேகை ஆகும்.
இந்த ரேகையை கொண்டு ஒரு மனிதனின் அறிவுத்திறனையும், ஆற்றலையும் தெரிந்துக்கொள்ள முடியும். மற்ற முக்கிய ரேகைகளைப் போலவே இதுவும் ஆழப் பதிந்திருந்தால் தான் நல்ல அறிவுத்திறனும், ஆற்றலும் உண்டு என்று சொல்லலாம்.
இந்த ரேகை சந்திர மேட்டிலிருந்தே தொடங்குமானால் இவர்களுடைய அதிர்ஷடத்திற்கும், வெற்றிக்கும் மற்றவர்கள் காரணமாகவும், உதவியாகவும் இருப்பார்கள்.
அதுமட்டுமின்றி விதி ரேகையான சனி ரேகையும் நன்றாக அமைந்திருந்தால் இவர்கள் புகழுடன் விளங்குவார்கள்.
இந்த ரேகை விதி ரேகையிலிருந்து தொடங்கினால் இவர்கள் சுய முயற்சியினால் வெற்றி அடைவார்கள்.
மேலும், ஓவியம், நுண்கலை, இலக்கியம் இவற்றில் இவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களில் சிலர் ஜோதிடம், மாந்திரீகம் இவற்றையும் கற்பார்கள்.
அதிர்ஷ்ட ரேகை எந்த அளவு அதிகமான நல்ல பலன்களைக் கொடுக்கக்கூடியதாக இருந்தாலும் அவர்களுடைய கையில் சூரிய ரேகை இல்லாவிடில் அவ்வளவு விசேஷ பலனைக் கொடுக்காது.
சூரிய ரேகை சூரிய மேட்டின் மேலேயே ஒரு சிறு கோடாக நீளமாக இருதய ரேகைக்கு மேலே இருந்தால் நாற்பத்தி மூன்றாவது வயதிலிருந்து ஐஸ்வர்யம் அவர்களுக்கு கிடைக்கும்.
Shared by M Vijayan
No comments:
Post a Comment