தூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும். - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Sunday, 3 May 2020

தூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்.

தூங்கறதுக்கு முன்னாடி இத செஞ்சிட்டு படுத்தீங்கன்னா தொப்பை சீக்கிரம் கரைஞ்சி காணாம போயிடும்...
உங்கள் உடலின் எடையை குறைக்க விரும்புகிறீர்களா? ஆம் என்றால். முதலில், ஒரு முழுமையான அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றத்தை பின்பற்றுங்கள். இதன் மூலம் மட்டுமே உங்கள் எண்ணம் நிறைவேறும். அதன்மூலம் எப்படி தொப்பையை எப்படி குறைக்கிறது என்று பார்க்கலாம்.
நீங்கள் உண்ணும் கலோரி அளவை உங்களால் முடிந்தவரை குறைத்து, வழக்கமான உடற்பயிற்சியுடன் அதை பூர்த்தி செய்வது முக்கியம். இதுவே, ஒரு முழுமையான அல்லது ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகும்.இருப்பினும், ஒரு நல்ல இரவு தூக்கத்தையும் முழுமையான ஓய்வையும் உங்கள் உடல் பெரும் போது, உங்கள் வயிற்று கொழுப்பை (belly fat) குறைக்க முடியும். தூக்கமின்மை உங்கள் உடலுக்கு எது சரியானது? எது தவறானது? என்று ஆராய்ந்து பார்க்கும் திறனைப் பாதிக்கும்.இதனால் நீங்கள் கொழுப்பு மற்றும் சர்க்கரை உள்ள உணவுகளை அதிக அளவில் எடுத்து கொள்ள விரும்புவீர்கள். மேலும், அதிக அளவு பசி உணர்வும் ஏற்படும். மேலும், இந்த தொகுப்பில் கூறப்படும் எளிய படுக்கை நேர ஹேக்குகளைப் (bedtime hacks) பின்பற்றுவதன் மூலம் நீங்கள் தூங்கும்போதும் கூட உங்கள் எடையைக் குறைக்க முடியும்.
​அறை வெப்பநிலை


    தூங்கும் அறையின் வெப்பநிலையை எப்போழுதும் குளிர்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்:
    நம் உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் கெட்ட கொழுப்புகள் என்று இரண்டு வகைகள் உள்ளன.
    சில நல்ல கொழுப்புகள், நமது உடலுக்கு கட்டாயம் தேவைப்படுகின்றன. அவற்றில் சில நமது உடல் எடையை குறைக்கவும் உதவுகின்றன.

​பழுப்பு கொழுப்பு (Brown Fat)


    பழுப்பு கொழுப்பு (Brown Fat), அல்லது பழுப்பு கொழுப்பு திசு என்பது சில நேரங்களில் நல்ல கொழுப்பை போன்று நம் உடலில் செயல்படும்.
    இதன் முக்கிய செயல்பாடு, உணவை உடல் வெப்பமாக மாற்றுவதாகும்.
    மேலும், இது உடலை உங்கள் சுற்றுப்புறங்களுடன் பழக்கப்படுத்திக்கொள்ள உதவுகிறது.
    இந்த வகை கொழுப்புகள், குளிர் வெப்பநிலையில் மட்டுமே இயங்குகிறது மற்றும் உங்கள் உடலுக்கு ஒரு உள் வெப்ப ஜாக்கெட் (internal heating jacket) போன்று செயல்படுகிறது.
    இதனால், அதிக பழுப்பு கொழுப்பு (Brown Fat) செல்களை செயல்படுத்துகிறது மற்றும் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது.
    எனவே, குளிர்ச்சியான சூழ்நிலையில் நாம் உறங்கும் போது.... உண்மையில் சில கூடுதல் கிலோவை நாம் இழக்கலாம்.

​வெள்ளை கொழுப்பு


    வெள்ளை கொழுப்பு அல்லது வெள்ளை கொழுப்பு திசு (WAT) என்பது உங்கள் முழு வாழ்க்கைக்கும் உதவும் நிலையான நல்ல கொழுப்பு ஆகும்.
    இது உங்கள் ஆற்றலை (Energy), உடலில் சுற்றி வரும் பெரிய கொழுப்பு நீர்த்துளிகளில் (large fat droplets) சேமிக்கிறது.
    வெள்ளை கொழுப்புகள், உங்கள் உறுப்புகளுக்கு இன்சுலேஷனை வழங்குவதன் மூலம் உங்கள் உடலின் வெப்பநிலையை சூடாக வைத்திருக்கவும் உதவுகிறது.
    உங்கள் வயிற்றைச் சுற்றியுள்ள வெள்ளை கொழுப்பு, உணவில் இருந்து கிடைக்கும் சக்தியை சேமிக்கவும் செய்கிறது.
    பொதுவாக, நமது உடலில் பழுப்பு கொழுப்பின் அளவுதான் அதிக அளவில் இருக்கும். இதனுடன் ஒப்பிடுகையில், வெள்ளை கொழுப்பின் அளவு மிக குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

​இருட்டு அறையில் தூங்குவது


    நீங்கள் ஒரு முழுமையான இருளில் தூங்கும் போது, கண்டிப்பாக உங்கள் உடலின் கூடுதல் எடையை இழக்கலாம்.
    படுக்கை அறையின் முழுமையான இருளுக்கு, விளக்குகளை மட்டும் அணைத்தால் போதாது.
    உங்கள் விட்டு ஜன்னல் வழியாக கூட, வெளிச்சம் படுக்கை அறையின் உள்ளே வருவதை தவிர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு, திரைச்சீலைகளை பயன்படுத்துங்கள்.
    ஒரு இருட்டு அறையில் நீங்கள் உறங்கும்போது, உங்கள் உடல் மெலடோனின் (Melatonin) உற்பத்தி செய்ய உதவுகிறது, இது தூக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வகை ஹார்மோன் ஆகும்.
    லேசான ஒளி அல்லது வெளிச்சத்தின் வெளிப்பாடு கூட, உடலின் மெலடோனின் உற்பத்திக்கு தடையாக இருக்கும்.
    மேலும், மெலடோனின் (Melatonin) உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கிறது மற்றும் குறிப்பாக பழுப்பு கொழுப்பை வெள்ளை கொழுப்பாக மாற்ற உதவுகிறது.

​தூங்குவதற்கு முன் க்ரீன் டீ அருந்துங்கள்


    உண்மையில், க்ரீன் டீயில் காஃபின் இருந்தாலும் கூட.......தூங்குவதற்கு முன் க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பச்சை தேயிலை கொழுப்பை எரிக்க உதவும் பல சேர்மங்களைக் கொண்டுள்ளது.
    இதில் உள்ள ஈ.சி.ஜி.சி (ECGC) போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும்.
    மேலும் இவற்றில் இருக்கும் காஃபின் கூட, உங்கள் உடலில் உள்ள பழுப்பு கொழுப்பைத் தூண்ட உதவுகிறது.
    கிரீன் டீயில், ஒரு கப் காபியில் இருக்கும் காஃபின் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

​போன் ஸ்விட்ச் ஆப் செய்யவும்


    உங்கள் படுக்கையறையில் நீங்கள் ஒரு மின்னணு சாதனம் (Electronic Item) வைத்து இருந்தால், கண்டிப்பாக..... உங்கள் தூக்க நேரம் பாதிக்கப்படும்.
    இதன் பொருள், நீங்கள் குறைவான நேரம் தூங்குவீர்கள் என்பதாகும்.
    நீங்கள் மிகவும் குறைவான நேரம் தூங்குபவர் என்றால், உங்கள் உடல் நீங்கள் இழந்த தூக்க நேரத்தை ஈடுகட்ட நீங்கள் உண்ணும் உணவின் அளவை அதிக படுத்தும். ஏனெனில், உங்கள் உடல் அதிகமாக சாப்பிடுவதன் மூலம் அதை ஈடுசெய்ய முயற்சிக்கிறது.
    குறைவான நேரம் தூங்குவதால், உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றல் குறைக்கப்படுகிறது. இதனால், உங்களால் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க இயலாது.
    இதனால் உங்கள் உடல் செயல்பாடுகள் பாதிக்கிறது. மேலும், தொலைபேசிகளிலிருந்து வெளிப்படும் நீல ஒளி கதிர்கள் உங்கள் உடலின் மெலடோனின் உற்பத்தியைத் தடுக்கலாம்.
    எனவே, கூடுதல் எடையை நீங்கள் குறைக்க விரும்பினால்... தூங்கும்போது உங்கள் தொலைபேசிகளை ஒதுக்கி வைப்பது அவசியமாகும்.

​சீக்கிரம் தூங்குங்கள்


    நீங்கள் வேறுவிதமாக நினைத்தாலும், நீங்கள் தூங்கும்போது கலோரிகளை எரிக்கிறீர்கள் என்பதே உண்மை.
    நீங்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது உங்கள் உடல் அதிக கலோரிகளை எரிக்கிறது. இதனால், நீங்கள் நீண்ட நேரம் நன்றாக தூங்கினால், அதிக கலோரிகளும் எரிக்கப்படும்.
    இதற்குக் காரணம், ஆழ்ந்த தூக்கத்தின் போது உங்கள் மூளை மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுவது தான்.
    ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது, மூளை ஆற்றலைப் (Energy) பயன்படுத்துகிறது. இதனால் உங்கள் உடல் மூளைக்கு தேவையான குளுக்கோஸை எரிபொருள் போன்று உற்பத்தி செய்கிறது.

No comments:

Post a comment

Post Top Ad