
உங்களுடைய வீட்டில் பணம்
தங்காமல் செலவாகிக் கொண்டே இருக்கிறதா... அப்படின்னா இதை செய்து பாருங்கள்..
பணம் சேருவதற்காக நாம் எத்தனையோ பரிகாரங்களையும், எத்தனையோ வழிபாட்டு
முறையையும் பின்பற்றுகிறோம். தினம் தோறும் நாம் இரண்டு வார்த்தைகளை
உச்சரிப்பதன் மூலம் பணம் சேரும்.
பொதுவாகவே தயிர் என்பது மகாலட்சுமிக்கு இணையாக சொல்லப்படும் ஒரு பொருள்.
இந்தத் தயிரை முடிந்தவரை கடைகளிலிருந்து வாங்காமல், நம் வீட்டிலேயே உறை
போடுவது நமக்கு லட்சுமி கலாட்சத்தை தேடித்தரும். இது நிதர்சனமான உண்மை.
தினந்தோறும் எந்த வீட்டில் இரவு நேரத்தில் தயிர் உறை ஊற்றப்படுகிறதோ, அந்த
வீட்டில் மகாலட்சுமி நிச்சயம் தங்குவாள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்த தயிரை உறை போடும் போதும், காலையில் கையில் எடுக்கும் போதும் தான் இந்த
வார்த்தையை நாம் சொல்லவேண்டும்.
முதல்நாள் இரவு பாலில் உறை போடும்போது 'சேமிரி' என்ற வார்த்தையை சொல்லி உறை
ஊற்றுங்கள். காலையில் பால் கெட்டிதயிராக மாறியிருக்கும். அதை உங்கள்
கைகளில் முதன்முதலில் எடுக்கும்போது 'பெருகு' என்ற வார்த்தையை சொல்லி
எடுக்க வேண்டும். அதாவது இரவு நேரத்தில் உறை போடுவது சேமிப்பிற்கான
அடித்தளத்தையும், மறுநாள் காலை அது பெருகி தயிராக மாறுவது, நம் செல்வத்தை
பெருக்குவதையும் குறிக்கிறது.
இது உண்மையான ஒன்று. இரவு நேரத்தில் நாம் உறைப்போடும் தயிரின் மூலமாக
மகாலட்சுமியானவள் நம் வீட்டில் வந்து தங்கி, மறுநாள் காலை நம் செல்வத்தை
பெருக்குவதற்கு துணையாக நிற்பாள் என்பது நம்பிக்கையாகும்.
No comments:
Post a Comment