இன்றைய (16-04-2020) ராசி பலன்கள்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday 16 April 2020

இன்றைய (16-04-2020) ராசி பலன்கள்:

 
மேஷம்
குடும்ப உறுப்பினர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். தொழில் சம்பந்தமான எண்ணங்களும், செயல்பாடுகளும் மேம்படும். மனதில் புதிய லட்சியங்களை உருவாக்குவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். தொழில்கல்வி சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அஸ்வினி : அனுகூலமான நாள்.

பரணி : இன்னல்கள் குறையும்.

கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
---------------------------------------
ரிஷபம்

 செய்யும் செயலுக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய சகோதரர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். பணி உயர்விற்கான முயற்சிகள் மேம்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சற்று நிதானத்துடன் செயல்படவும். பெற்றோர்களை பற்றிய சிந்தனைகள் மனதில் தோன்றும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : அங்கீகாரம் கிடைக்கும்.

ரோகிணி : முயற்சிகள் மேம்படும்.

மிருகசீரிஷம் : நிதானத்துடன் செயல்படவும்.
---------------------------------------

மிதுனம்

 குடும்ப உறுப்பினர்களிடம் மனக்கசப்புகள் உருவாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். பழைய நினைவுகளால் சோர்வும், குழப்பமும் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது பேச்சுக்களில் கவனம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மிருகசீரிஷம் : மனக்கசப்புகள் உருவாகும்.

திருவாதிரை : கவனம் வேண்டும்.

புனர்பூசம் : குழப்பமான நாள்.
---------------------------------------
கடகம்
உடல் தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகளும், செயல்பாடுகளும் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் கிடைக்கப் பெறுவீர்கள்.  திறமைகளை வெளிப்படுத்துவதற்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : செயல்பாடுகள் மேம்படும்.
பூசம் : மாற்றம் உண்டாகும்.
ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
சிம்மம்
மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். முக்கியமான விஷயங்கள் குறித்த செயல்பாடுகளை தனிமையில் சிந்தித்து முடிவெடுத்தல் நன்மையை அளிக்கும். தொழில் சார்ந்த புதிய முதலீடுகளால் மேன்மை உண்டாகும். நினைத்த காரியங்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி எண்ணிய முடிவு கிடைக்கும். சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
மகம் : தன்னம்பிக்கை மேம்படும்.
பூரம் : சிந்தித்து செயல்படவும்.
உத்திரம் : சாதகமான நாள்.
---------------------------------------
கன்னி
 மனதில் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள் புதிய குறிக்கோள்களை உருவாக்குவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் மற்றும் எதிர்பார்த்த பணிகள் நிறைவேறும். உடல் ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். நெருக்கமானவர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்கள் கூறும் தற்பெருமைக்கு செவிசாய்க்காமல் இருப்பது நன்மையை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : எண்ணங்கள் ஈடேறும்.
அஸ்தம் : மேன்மை உண்டாகும்.
சித்திரை : உதவிகள் கிடைக்கும்.
--------------------------------------

துலாம்

 உத்தியோகஸ்தர்களுக்கு நிர்வாகத் திறன் மேம்படும். எதிலும் ஈடுபடாத ஒரு திருப்தியற்ற சூழ்நிலை உண்டாகும். மனைவிவழி உறவினர்களின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தையின் ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். புதிய பொருட்கள் உருவாக்கம் பற்றிய சிந்தனைகள் மனதில் இருந்துகொண்டே இருக்கும்.


அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்


சித்திரை : திறமைகள் மேம்படும்.

சுவாதி : சுபமான நாள்.

விசாகம் : சிந்தனைகள் மேலோங்கும்.
---------------------------------------

விருச்சகம்

 பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் அனைவராலும் பாராட்டப்படுவீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். இறை நம்பிக்கை மனதில் ஏற்படும். உயர் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


விசாகம் : பாராட்டப்படுவீர்கள்.

அனுஷம் : சாதகமான நாள்.

கேட்டை : அறிமுகம் கிடைக்கும்.
---------------------------------------




தனுசு

மனதில் எழும் எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கண் பார்வையில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனம் தொடர்பான காரியங்களில் இலாபம் மேம்படும். ஆடை, அணிகலன்கள் சேர்க்கை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

மூலம் : வாய்ப்புகள் உண்டாகும்.

பூராடம் : மகிழ்ச்சியான நாள்.

உத்திராடம் : இலாபம் மேம்படும்.
---------------------------------------

மகரம்

 தொழிலில் கூட்டாளிகளால் ஆதரவான நிலை உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் பாராட்டப்படுவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வர்த்தகம் சம்பந்தமான பணியில் இலாபம் மேம்படும்.


அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்


உத்திராடம் : ஆதரவான நாள்.

திருவோணம் : ஆதாயம் உண்டாகும்.

அவிட்டம் : அன்யோன்யம் அதிகரிக்கும்.
---------------------------------------

கும்பம்

 சந்தேக உணர்வினால் நண்பர்களிடம் மனக்கசப்புகள் நேரிடலாம். முன் கோபத்தை தவிர்த்து நிதானத்துடன் செயல்படவும். நினைத்த காரியங்களில் காலதாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன்கள் கிடைக்கும். விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த வேலைகளை செய்து முடிப்பீர்கள்.


அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்


அவிட்டம் : மனக்கசப்புகள் நேரிடலாம்.

சதயம் : நிதானத்துடன் செயல்படவும்.

பூரட்டாதி : காரியசித்தி உண்டாகும்.
---------------------------------------

மீனம்

 வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த  பழைய சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழலால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் உண்டாகலாம். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்


பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.

உத்திரட்டாதி : கலகலப்பான நாள்.

ரேவதி : இடமாற்றம் உண்டாகலாம்.
---------------------------------------

No comments:

Post a Comment

Post Top Ad