அடிக்கடி தொண்டையில் பிரச்சினையா? கவனம் தேவை - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday 31 January 2018

அடிக்கடி தொண்டையில் பிரச்சினையா? கவனம் தேவை

அடிக்கடி தொண்டையில் பிரச்சினையா? கவனம் தேவை
நம்மில் பலருக்கு அடிக்கடி தொண்டை வலி, விழுங்குவதில் சிரமம், தொண்டையில் எரிச்சல், தொண்டையில் கரகரப்பு, அதிக உமிழ்நீர் வடிதல், தொண்டையில் ஏதோ அடைத்துக் கொண்டிருப்பது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் வருடத்தில் பல தடவைகள் வந்து போவதுண்டு. பலர் இத்தகைய அறிகுறிகளை அலட்சியம் செய்துவிட்டு அவ்வப்போது கிடைக்கின்ற தற்காலிக நிவாரணிகளை உட்கொண்டு அறிகுறிகளை மறக்கடித்து வருகின்றனர். 

இத்தகைய நடவடிக்கையால் இந்த நோயின் அடிப்படை காரணமான பிஹுமாலிடிக் ஸ்டெப்டோ காக்கை என்னும் ஒருவித நச்சுக்கிருமி ரத்தத்தில் வீரியமடைந்து, நாளடைவில் அதன் நச்சுத் தன்மை கால் மூட்டுகள், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் நிரந்தர பாதிப்புக்கு உட்படுத்தி விடும் என்பது நம்மில் பலருக்கு தெரியாத விஷயம்.

இந்த நோயின் அறிகுறிகள் என்ன?

1. தொண்டையில் வலி 2. அடிக்கடி காய்ச்சல் 3. தொண்டையில் வெளிப்பொருள் அடைத்து கொண்டிருப்பது போன்ற உணர்வு 4. அடிக்கடி உடல் தளர்வு, அசதி 5 .கை, கால் மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் போன்றவை நோயின் அறிகுறி ஆகும்.


மேல் சுவாசக்குழாய் தொற்று உள்ளவர்களுக்கு இந்த நோய் அதிகமாக ஏற்படுகிறது.

இதற்கு தகுந்த காது, மூக்கு, தொண்டை நிபுணரை அணுகி ஆரம்ப கட்டத்திலேயே தொண்டை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் நவீன தொண்டை என்டாஸ் கோப்பி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மூக்கு தண்டு வளைதல் இருந்தால் அதனை என்டாஸ்கோப்பி மூலமாக சரி செய்து கொள்ளுதல், சைனஸ் நோய் இருந்தால் அதனை நிரந்தரமாக சரி செய்து கொள்ளுதல், சளி பிடிக்கின்ற உணவு வகைகளை தவிர்த்துக் கொள்ளுதல், முக்கு, தொண்டை, வாய், பற்கள் ஆரோக்கியத்தை நல்ல முறையில் பாதுகாத்துக்கொள்ளுதல் போன்ற அம்சங்கள் மிக முக்கியமாகும்.

மேலும் இந்த நோயினை ரத்தபரிசோதனை மூலமாக எளிதில் கண்டறியலாம். குறிப்பாக தொண்டையில் இருந்து சிறிது சளியை எடுத்து அதனை கல்சர் டெஸ்டிங் என்று சொல்லப் படுகிற கிருமி ஆய்வு செய்வதன் மூலமாகவும், ஏ.எஸ்.ஓ. டிட்ரி என்று சொல்லப்படு கிற ரத்த பரிசோதனை மூலமாகவும் தற்போதைய அதிநவீன ஆய்வுக்கூட நோய் எதிர்ப்பு திறன் ஆய்வுகள் மூலமாகவும் எளிதில் கண்டறிய முடியும்.

ஆய்வுக்கூடம் மூலமாகவும் தகுந்த மருத்துவ பரிசோதனை மூலமாகவும் கண்டறியப்பட்ட தொண்டை வலியின் அடிப்படை காரணங்களை தகுந்த தொடர் மருத்துவ சிகிச்சை மூலமாகவோ அல்லது தேவைப்பட்டால் சைனஸ் அறுவை சிகிச்சை மற்றும் டான்சில் அறுவை சிகிச்சை மூலமாக இத்தகைய உயிருக்கே உலை வைக்கும் தொண்டை வலி நோயிலிருந்து நிரந்தமாரமாக நிவாரணம் பெறலாம்.

மேற்கண்டவாறு நாகர் கோவில் உமர் ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பி.முகம்மது உமர் கூறினார்.

டாக்டர் பி.முகம்மது உமர்

No comments:

Post a Comment

Post Top Ad