12TH JUNE EXAM TODAY DOWNLOAD HALL TICKET: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 15 June 2017

12TH JUNE EXAM TODAY DOWNLOAD HALL TICKET:

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு எழுதுவோர் கவனத்துக்கு- இன்று முதல் HALL TICKET DOWNLOAD செய்யலாம்.

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை தனித்தேர்வர்கள் வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: நிகழாண்டு ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்ட நாள்களில் விண்ணப்பித்த அனைத்து தனித்தேர்வர்களும் (தத்கல் உள்பட) வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல்  www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எழுத்து மற்றும் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாகப் பெற்றுத் தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வை மீண்டும் செய்வதுடன் எழுத்துத் தேர்வுக்கும் வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்வுக்கு வருகை தர வேண்டும்.
மொழிப்பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தை தனித்தேர்வர்கள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு இல்லாமல் எந்தவொரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad