What are the benefits of dry grapes? Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Monday 9 January 2017

What are the benefits of dry grapes? Kalvikural.com

ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்?

நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும்.
புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல் நலன் சீர்கெட முக்கிய காரணிகளாக இருக்கின்றன.
உங்கள் கல்லீரல் ஆரோக்கியம் சீர்குலைந்து போனால் ஈரல் அழற்சி, ஈரல் நோய் மற்றும் கொழுப்பு கல்லீரல் போன்றவை உண்டாகும் அபாயம் இருக்கின்றன.ஸ்டெப் #1 நீங்கள் முதலில் ஒரு பானை, கை நிறைய உலர்ந்த திராட்சை மற்றும் இரண்டு கிளாஸ் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் #2 எந்த விகிதத்தில் நீங்கள் உலர்ந்த திராட்சை மற்றும் நீரை கலக்கிறீர்கள் என்பது மிகவும் அவசியம். ஆம், அரை கிளாஸ் அளவு உலர்ந்து திராட்சை எடுத்துக் கொண்டால், ஒன்றரை கிளாஸ் அளவு நீர் கொண்டு நீங்கள் கலக்க வேண்டும். 1:3 என்ற விகிதத்தில் தான் கலக்க வேண்டும்

ஸ்டெப் #3 பானையில் உலர்ந்த திராட்சை மற்றும் நீர் கலந்த பிறகு அதை மூடி வைத்து சில நிமிடங்கள் சூடு செய்ய வேண்டும். சூடாகிய பிறகு அடுப்பில் இருந்து இறக்கி வைத்துவிடுங்கள். ஓர் நாள் இதை உங்க சமையல் அறையிலேயே வைத்துவிடுங்கள்.

ஸ்டெப் #4 அடுத்த நாள் நீங்கள் காலையில் எழுந்ததுமே, அந்த நீரை குடிக்க வேண்டும். இதை ஒரு வாரம் விடாமல் கடைபிடித்து வந்தால், நீங்கள் ஒரு நல்ல மாற்றத்தை உணர முடியும்.


குறிப்பு:
இதை பின்பற்றி வரும் நாட்களில் நீங்கள் கட்டாயம் துரித உணவுகள், ஆல்கஹால், சிகரெட் போன்றவற்றை அறவே ஒதுக்கிவிட வேண்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad