Healthy Breakfast Recipes : Low Calorie Breakfast Recipe |Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Saturday 3 December 2016

Healthy Breakfast Recipes : Low Calorie Breakfast Recipe |Kalvikural.com

காலை உணவு உடல் நலத்திற்கு உகந்தது

குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட தேவையான சக்தியை அளிக்கிறது.
அதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர்.
அதிலும் பள்ளிக்குழந்தைகள் அதிகமானோர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் வெறும் வயிறுடனே பாடசாலை செல்கின்றனர்.இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.
இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.
காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், சமிபாட்டு தொகுதி மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு குருதியில் சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம்.
அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு வழங்குதல் சிறந்தது என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

No comments:

Post a Comment

Post Top Ad