Hair Fall Control Tips For Men - Search & Find Quick Results | Kalvikural.com - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Tuesday 13 December 2016

Hair Fall Control Tips For Men - Search & Find Quick Results | Kalvikural.com

தலையில் சொட்டை விழாமல் தடுப்பது எப்படி:
வழுக்கைத் தலை பிரச்சினையில் பெண்களை விட ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம், ஆண்கள் பெண்களைப் போல், தங்கள் முடிக்கு போதிய பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை. இத்தகைய முறையான பராமரிப்பின்மையினால், ஆண்கள் இளம் பருவத்திலேயே முடி உதிர்தல் பிரச்சினைக்கு
உள்ளாகி, வழுக்கையை பெறுகின்றனர்.
உண்மையில் ஆண்களை விட பெண்கள் தான் அதிக முடி உதிர்தல் பிரச்சினைக்கு ஆளாகின்றனர். ஆனால் பெண்கள் முடி உதிர்தல் பிரச்சினை ஆரம்பித்த உடனேயே, முடியை சரியாக பராமரிக்க ஆரம்பித்து விடுவதால், வழுக்கை தலை ஏற்படாமல் தப்பிக்கின்றனர்.
ஆண்களோ, அதிகப்படியான வேலைப்பளுவினால், முடியை சரியாக பராமரிக்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் வழுக்கை தலையை அடைகின்றனர். என்ன செய்வது, வழுக்கை தலை வராமல் தடுக்க வேண்டுமெனில் முடியை பராமரிக்க வேண்டியது அவசியமாகிறது.

எனவே ஆண்களே! நேரம் கிடைக்கும் போது, வெளியே அதிகம் ஊர் சுற்றாமல், சற்று முடியின் மீது அக்கறை கொண்டு, சில எளிமையான முடி பராமரிப்புக்களை மேற் கொள்ளுங்கள்.

உங்களுக்காக முடியை பராமரிப்பதற்கான சில எளிமையான வழிகளை பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய வழிகளை பின்பற்றினால், முடி ஆரோக்கியமாக இருப்பதோடு, முடி உதிர்தல் பிரச்சினையிலிருந்து விடுபட்டு, வழுக்கையிலிருந்து தப்பிக்கலாம்.

எண்ணெய் மசாஜ்: அனைத்து ஆண்களும் முடி உதிர்தலைத் தடுக்க முதலில் செய்ய வேண்டியது, வாரத்திற்கு இரண்டு முறை தலைக்கு பாதாம், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்களைக்கொண்டு நன்கு தலைக்கு மசாஜ் செய்து, ஊற வைத்து குளிப்பதுதான். இதனால் முடிக்கு தேவையான சத்துக்களை கிடைத்து, முடி நன்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.

தேங்காய் பால்: தேங்காய் பால், முடியின் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, முடியில் ஏற்படும் வறட்சியை தடுக்கும். எனவே தேங்காய் பாலை தலைக்கு தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். குறிப்பாக இந்த முறையால் முடி நன்கு மென்மையாகும்.

கற்றாழை: முடி வலிமையோடு வளர வேண்டுமெனில், கற்றாழை ஜெல்லைக் கொண்டு ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், முடி உதிர்தல் குறைந்து, ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனையை தடுக்கலாம்.

வேப்பிலை: வேப்பிலை அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள அல்கலைன் சீராக இருப்பதோடு, முடி உதிர்தலும் நிறுத்தப்படும். மேலும் இந்த முறையை இன்னும் சிறப்பானதாக மாற்றுவதற்கு, வேப்பிலை பேஸ்டுடன், தேன் மற்றும் ஆலிவ் ஆயிலை கலந்து தேய்க்கலாம்.

முட்டை: முடி பராமரிப்பில் முடிக்கு புரோட்டீன் சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். முடி நன்கு வலுவோடும், அடர்த்தியாகவும் வளர வேண்டுமெனில், இந்த புரோட்டீன் சிகிச்சையை வாரத்திற்கு 34 முறை மேற்கொள்ள வேண்டும். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், முட்டை உடைத்து பவுலில் ஊற்றி நன்கு அடித்து, ஈரப்பதமுள்ள முடியில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் முடியை அலச வேண்டும்.

வெந்தயம்: 2-3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நீரில் 8-10 மணி நேரம் ஊற வைத்து, அரைத்து ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளித்தால், முடி உதிர்வது குறைவது மட்டுமின்றி, முடியின் வளர்ச்சியும் அதிகரித்து, பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

அவகேடா: அவகேடோ மற்றும் வாழைப்பழத்தை நன்கு மசித்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலசினால், முடி ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

ஆரஞ்சு: ஸ்கால்ப்பில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் பொடுகு இருந்தால், அப்போது அதனை போக்குவதற்கு, ஆரஞ்சு பழத்தின் தோலை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி ஊற வைத்து, குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

மருதாணி இலை: நல்ல கருமையான மற்றும் அடர்த்தியான முடி வேண்டுமெனில், மருதாணி இலையை அரைத்து, முடியில் தடவி, மூன்று மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

எலுமிச்சை சாறு: முடி பராமரிப்பில் அதிகம் பயன்படுவது எலுமிச்சை என்பது தெரிந்த விஷயம் தான். அத்தகைய எலுமிச்சையின் பாதியை தேங்காய் எண்ணெயில் பிழிந்து, ஸ்கால்ப்பில் தடவி, 34 மணிநேரம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

வேண்டுமெனில் இந்த முறையை இரவில் படுக்கும் போது செய்து, தலையில் ஒரு பிளாஸ்டிக் கவரைக் கொண்டு சுற்றிக் கொண்டு தூங்கி, காலையில் குளிக்கலாம். ஆக மொத்தம் முடி உதிர்வதை தடுத்து என்றென்றும் இளமையுடன் காட்சி அளிப்போம்.

No comments:

Post a Comment

Post Top Ad