5 ஆண்டு காலத்துக்கு குறைவான பணிக் காலம்: பி.எஃப். பணத்தை திரும்பப் பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம்: - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Thursday, 4 June 2015

5 ஆண்டு காலத்துக்கு குறைவான பணிக் காலம்: பி.எஃப். பணத்தை திரும்பப் பெறும் போது 10 சதவீத வருமான வரி பிடித்தம்:

ஐந்து ஆண்டு காலத்துக்கு குறைவான அளவில் பணிக் காலத்தை நிறைவு செய்து, வருங்கால வைப்பு நிதி (பி.எஃப்.) பணத்தை திரும்பப் பெறும்போது 10 சதவீத வருமான வரி பிடித்தம் செய்யப்படும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையர் தெரிவித்துள்ளார்.
 இதுகுறித்து, சென்னை மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.டி.பிரசாத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 இந்திய நிதி சட்டம்- 2015இல் வருங்கால வைப்பு நிதி சேமிப்பில் உள்ள தொகையினை உரிய தொழிலாளிக்கு பட்டுவாடா செய்வது குறித்த புதிய பிரிவு 192-ஏ சேர்க்கப்பட்டுள்ளது.
 இந்தப் பிரிவானது ஜூன் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
 இதன்மூலம், 5 ஆண்டுகளுக்குக் குறைவாக பணிக்காலம் உடைய தொழிலாளியின் வருங்கால வைப்பு நிதி சேமிப்பு தொகையானது, ரூ. 30 ஆயிரம், அதற்கு கூடுதலாக கணக்கு முடிப்பு பட்டுவாடா செய்யப்படும்போது, வருமான வரியானது குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் மூலத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
 அதாவது, தொழிலாளி தனது வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை சமர்ப்பித்திருந்தால், மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தமானது 10 சதவீதமாக இருக்கும். அவர் படிவம் எண் 15- ஜி, 15ஹெச்-ஐ சமர்ப்பித்திருந்தால் வருமான வரியானது மூலத்தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
 தொழிலாளி தனது வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை (படிவம் எண் 15ஜி, 15எச்) சமர்ப்பிக்கத் தவறினால் அதிகபட்ச சதவீத அளவிலான (34.608 சதவீதம்) வருமான வரியானது மூலத் தொகையில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
 வரிப் பிடித்தம் எப்போது செய்யப்பட மாட்டாது?
 எனினும் ஒரு சில சந்தர்ப்பங்களில் மூலத்தொகையில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்யப்பட மாட்டாது.
 அதன் விவரம் வருமாறு:
 * ஒரு பி.எஃப். கணக்கில் இருந்து மற்றொரு பி.எஃப். கணக்கிற்கு தொகை மாற்றம் செய்யப்படும்போது...
 * உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்படும்போது...
 * வணிக ஒப்பந்தத்தை தொழில் நிறுவனர் இடையில் முறித்துக்கொள்ளும்போது...
 * திட்டம் நிறைவு பெறுதல் மற்றும் தொழிலாளியின் கட்டுக்கு அப்பாற்பட்ட நிலையில் பணி நீக்கம் அடையும்போது...
 * தொழிலாளி முந்தைய நிறுவனத்தின் பணிக்காலத்தோடு 5 ஆண்டுகள் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினராக தொடர்ந்து இருந்து, பிறகு பி.எப். கணக்கை முடித்துக் கொள்ளும்போது...
 * உறுப்பினர் 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்து ரூ. 30 ஆயிரத்திற்கும் குறைவாக பி.எஃப். பட்டுவாடா பெறும்போது...
 * தொழிலாளி 5 ஆண்டுகளுக்கும் குறைவாக பணி புரிந்திருந்து, ரூ. 30 ஆயிரம், அதற்குக் கூடுதலாக பி.எஃப். பட்டுவாடா பெற்றாலும், வருமான வரி நிரந்தர கணக்கு எண், படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ சமர்ப்பித்திருந்தால்...
 வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட மாட்டாது என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 விவரங்களைத் தெரிவிக்க வேண்டுகோள்
 மேற்கூறிய சட்ட மாற்றத்திற்கு உள்பட்ட வகையில் வருங்கால வைப்பு நிதி திட்ட உறுப்பினர்கள் தங்களது பி.எஃப். கணக்கு முடிப்பு படிவம் எண் 19-ஐச் சமர்ப்பிக்கும்போது பணி முடிப்பு பற்றிய சரியான விவரம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு) விவரத்தையும் உரிய பகுதியில்
 அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
 படிவம் எண் 15ஜி, 15எச்-ஐ பி.எஃப். கணக்கு முடிப்பு படிவ எண் 19- உடன் இணைக்கவும் தவறக் கூடாது. கூடுதல் விவரங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (இ.பி.எஃப்.) நிறுவன அலுவலகங்களை அணுகலாம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad