தமிழகத்தில் கால்நடை மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேர இதுவரை 18,738 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழு (இளநிலை படிப்புகள்) தலைவர் மா.திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
""தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளான "பி.வி.எஸ்சி. அண்ட் ஏஎச்', பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்), பி.டெக். (பால்வளத் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 17-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
இணையதளம் மூலம் விண்ணப்பத்தை இதுவரை 18,738 பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். "பி.வி.எஸ்சி. அண்ட் ஏஎச்' படிப்பில் சேர 13,225, இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக சேர்க்கை குழு (இளநிலை படிப்புகள்) தலைவர் மா.திருநாவுக்கரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-
""தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2015-16-ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப்படிப்புகளான "பி.வி.எஸ்சி. அண்ட் ஏஎச்', பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்), பி.டெக். (பால்வளத் தொழில்நுட்பம்), பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) ஆகியவற்றில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 17-ஆம் தேதி முதல் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன.
பி.டெக். (உணவுத் தொழில்நுட்பம்) படிப்பில் சேர 2,321,
பி.டெக். (பால்வளத் தொழில்நுட்பம்) 1,948, பி.டெக். (கோழியின உற்பத்தி தொழில்நுட்பம்) 1,214 என மொத்தம் 18,738 விண்ணப்பங்கள் புதன்கிழமை (ஜூன் 3) வரை பதிவிறக்கம் (விநியோகம்) செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 10 கடைசி: இதுவரை சுமார் 6,000 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்துள்ளன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர வரும் ஜூன் 10-ஆம் தேதி கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment