தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டக்கடலை! அரசாணை வெளியீடு! - HEALTH TIPS AND GENERAL NEWS | EDUCATION DEPARTMENT FLASH NEWS |

Home Top Ad

https://www.youtube.com/channel/UCa-bHd9lKZ6GXuPvs-AW9CQ?view_as=subscriber

Post Top Ad

https://t.me/joinchat/NY8iCBcU-6hUiJ817Gy1qg

Wednesday, 18 November 2020

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 5 கிலோ கொண்டக்கடலை! அரசாணை வெளியீடு!

 

பொது மக்களுக்கு கொரோனா நிவாரணமாக கொண்டக்கடலை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

உலகத்தையே பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றால் தினமும் ஏராளமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது.

கொடிய கொரோனா வைரஸ் நோய்த் தொற்றில் இருந்து பொது மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய - மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், கொரோனா கட்டுக்குள் உள்ள இடங்களில், ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், முடிதிருத்துவோர், சலவைத் தொழிலாளர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், பொற்கொல்லர் உள்ளிட்ட 17 வகையான தொழில்களில் ஈடுபட்டு வரும் 75 லட்சம் தொழிலாளர்கள் ஊரடங்கினால் வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

இதனால், பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒவ்வொரு ரேசன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ.1000 ஆயிரம் நிவாரணமாக வழங்கியது.

இந்த நிலையில், ஒவ்வொரு ரேசன் கார்டு வைத்துள்ள குடுபத்தினருக்கு தலா 5 கிலோ கொண்டக்கடலை வழங்க உத்தரவிட்டுள்ளது. அதற்கான அரசானையையும் வெளியிட்டுள்ளது. ஜூலை ம்- தேதி முதல் 5 மாதங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டக்கடலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. அதில், மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இதனால்தான், பொது மக்களுக்கு அரசு கொண்டக்கடலை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

2 comments:

  1. ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.

    ReplyDelete

Post Top Ad